Tuesday, September 12, 2023

KNOW ABOUT SPARSH TAMIL SERIES 3

 


 

7  முக்கியமாக ஸ்பார்ஷ்க்கு நம் வங்கி கணக்கு மாறிய பிறகு , நாம் செய்ய வேண்டிய வேலை பென்சனர் டாட்டா வெரிஃபிகேஷன் கிளிக் செய்து நம் பெயர், பிறந்த தேதி, விலாசம், கை பேசி எண் பாலினம் ஆகிய ( AADHAAR DEMOGRAPHIC DETAILS) எல்லாம் சரி பார்க்க வேண்டும். கூடவே நம் சார்ந்தோரின் (DEPENDANTS) மேற்கூறிய விபரங்களையும் சரி பார்க்க வேண்டும்.. இவை பிபிஒ வில் கண்ட படி இருக்க வேண்டும் என்பது அவசியம். அவ்வாறு இல்லையானால் ஆதார் கார்டில் பிபிஒ வில் உள்ள படி திருத்த வேண்டும். வங்கி பாஸ்புக்கில் பெயரையும்  பிபிஒ வில் உள்ள படி சரி செய்யவும் ( இதற்கு வங்கியை அணுகவும்.

 உதாரணம்  :   பிபபி ஒவில் ,  S RAMAN என்று பெயர் இருந்தால், ஆதார் கார்டிலும், வங்கி பாஸ்புக்கிலும் ,   RAMAN S  ,   RAMAN SUNDAR , SUNDAR RAMAN,  ஏன்றோ இருந்தால் , அது தவறு. திருத்தப்பட வேண்டும். இதே விதி முறை தான் சார்ந்தோர் களுக்கும் பொருந்தும். இது சரி செய்யப்படாதவரை ஸிஸ்டம் ஏற்றுகொள்ளாது..   உங்கள் மற்றும் சார்ந்தோர்களின் PAN NO உள்ளிடு செய்து, பதிவேற்றம் செய்யவும். பென்சனர் மர்றும் குடும்ப பென்சனர் களின் பான் எண் பதிவேற்றம் செய்யாவிட்டால் 20% வருமானவரி பிடித்தம் செய்யப்படும் என்பதை அறியவும். 

 

8  ஸ்பார்ஷில்  லாகின் செய்து செர்வீஸஸ் சென்று பின் பென்சனர் டாட்டா வெரிஃபிகேஷன் ல் நுழைந்தால் UN / PW  உள்ளீடு செய்து உங்கள் பெர்சனல், செர்வீஸ் ,  ஃபேமிலி , பேங்க்,  அதர்ஸ் , நாமினேஷன்  போன்ற எல்ல DETAILS ம் சரி பார்க்கலாம்,  பேனா “” குறியிட்ட பாக்ஸை கிளிக் செய்து மாற்றம் செய்யலாம்.  ஆனால், DOCUMENT MENU வை கிளிக் செய்து வரும் திரையில்  கேட்கப்படும்  ஆதாரங்கள் “ PROOFS “  அத்தனையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.  பிறகு தான் APPROVAL/ CONFIRMATION வரும்   . அல்லது

   ஸ்பார்ஷ் போர்ட்டலில் நுழைந்து UN / PW உள்ளீடு செய்து, வரும் திரையின் மெனு வில் MY PROFILE,  MANAGAE PROFILE, சென்று பென்சனர் டாட்டா வெரிஃபிகேஷன் கிளிக் செய்து, சரி பார்க்கலாம்.  பேனா குறியீட்டில் கிளிக் செய்து மாற்றமும் செய்யலாம்.. முன்பு சொன்னது போலவே DOCUMENT ல் கிளிக் செய்து PROOF (ஆதாரம்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

                                                                                                       continued

 

No comments:

Post a Comment

26TH CASE OF SWITCHING OVER TO FAMILY PENSION.

  Sucibai Chandramadi  W/o late  Sep. A.Isaac Jothimoney   and her Daughter in Law. at our Office         One  vertean  Sepoy A. ISAAC JOTHI...