Friday, September 15, 2023

KNOW ABOUT SPARSH TAMIL SERIES -6

 


14  இறப்பு / குடும்ப பென்சன் பெறுவது : ஒரு  சர்விஸ் பென்சனர் இறந்து விட்டால் முதலில் பிபிஒ வில் உள்ளபடி பெயர் பதிவு செய்யப்பட்ட இறப்பு சான்று பெற வேண்டும். பின் இறப்பு சான்று, இறந்தவர் ஆதார், பான் கார்ட்,வங்கி பாஸ்புக்(,JOINT ACCOUNT, அல்லது மனைவியின் தனி வங்கி கணக்கு), இவற்றை ஸ்கேன் செய்து ஸிஸ்டத்தில் தயார் நிலையில் வைத்து கொள்ளவும்.. இது போல் பென்சனரின் இறப்பை ரிபோர்ட் செய்பவரின் ( ரிபோர்ட் செய்பவர் பென்சனரின் மனைவியாகவோ, மகனாகவோ, மகளாகவோ, சகோதர, சகோதரி யாகவோ, பெற்றோராகவோ, அல்லது யாராகவும் (OTHERS), இருக்கலாம். அப்படி ரிபோர்ட் செய்பவரின் ஆதார், பான், பேங்க் பாஸ்புக் எல்லாம் ஸ்கேன் செய்து வைத்து கொள்ளவும். (மொபைல் எண், மெயில் ஐடி யும் தயராக வைத்து கொள்ளவும்.  ஸ்பார்ஷ் போர்ட்டலில் லாகின் செய்து செர்விஸஸ் கிளிக் செய்து திரையின் வலது கடைசியில் காணும் FAMILY HEAD ல் , REPORT EVENT / DEATH REPORTING கிளிக் செய்யவும்.  கேட்கும் தகவல்களை கொடுக்கவும்.  ஒன்றன் பின் ஒன்றாக  பென்சனர் டிடேல்ஸ், ரிபோர்ட்டர் டிடேல்ஸ்,  கிளைம் டிடேல்ஸ், க்ளைமன்ட் டிடேல்ஸ், எல்லாம் கொடுக்கவும்.  சில கேள்விகளுக்கு பதில் அளிக்கவும். பிறகு இறப்பு சான்று பதிவேற்றம் செய்ய சொல்லும்.  பதிவேற்றம் செய்யவும்.. பின் இறந்த தேதியும் இறப்புக்கான காரணமும் கேட்கும்.  .இறப்பு என்று பதிவு செய்யவும்..2வது மற்றும் 3வது தகவலில் மனைவி பற்றிய விபரங்கள் கேட்கும்.  அதன் பின் 4 வது தகவலில் வங்கி பற்றியதாக இருக்கும். இதை எல்லாம் கொடுத்த பின் ஸ்கேன் செய்து வைத்திருக்கும் ஆதார்,  பான்,  வங்கி பாஸ்புக், பதிவேற்றம் செய்யவும்.

இதன் பின் எல்லாம் சரியாக இருந்தால் உடனேயோ , அல்லது 10 அல்லது 15 நாள்களில்  மனைவின் கொடுக்கப்பட்ட கைபேசிக்கு ஒரு புதிய SMS வரும்.  அதில் ஸ்பார்ஷ் பிபிஒ,  ஸ்பார்ஷ் பிபிஒ வின் கடைசியில் 02 சேர்க்கபட்ட UN / USERID .இருக்கும். கூடவே, 10 எழுத்து /எண் அல்லது இரண்டும் கலந்த பாஸ்வர்ட் இருக்கும்.  இதை ஸ்பார்ஷ் போர்ட்டலில் உள்ளீடு செய்து வரும் திரையில் உங்களுக்கான ச்சாய்ஸ் (CHOICE)  பாஸ்வர்ட் உறுவாக்கவும் . பின் FAMILY பென்சனருக்கான எல்லா விபரங்களும் சரி பார்த்து, தேவையான திருத்தங்களையும் செய்து கொள்ளவும். . பிறகு, MY DOCUMENT ல் கிளிக் செய்து  பென்சனர் பிபிஒ, கோரிஜெண்டம் பிபிஒ, பென்சன் ஸ்லிப் , ENTITLEMENT,  FORM 16, எல்லாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

                                                                                              CONTINUED

No comments:

Post a Comment

8TH CENTRAL PAY COMMISSION

  GOOD NEWS -8 TH CENTRAL PAY COMMISSION9   Dear All,   It is a happy news that our Government has appointed   Members for the   8 th ...