Saturday, June 11, 2011

ESM HELPLINE CENTRE AT CHENNAI

சென்னை கோட்டையிலுள்ள முன்னாள் இராணுவத்தினர்

உதவி மையம் (ESM HELP LINE CENTRE) பல சிறந்த பணிகளை

செய்துவருகிறது.


அந்த உதவி மையம் செய்துவரும் பணிகளில் சில


1. உதவி மையத்தில் முன்னாள் இராணுவத்தினருக்கும் அவர்தம்

குடும்பத்தினருக்கும் தங்கும் வசதி. (குறைந்த வாடகையில்)

2. சென்னையில் பல இடங்களுக்கு செல்ல வாகன வசதி. (குறைந்த

வாடகையில்) மருத்துவ மனைகளுக்கு செல்ல இது மிகவும் வசதி.

3. பென்சன் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.

4. தமிழ் நாட்டில் பல இடங்களில் முன்னாள் இராணுவத்தினர் சந்திக்க

ஏற்பாடு செய்தல். (Conducting ESM Rallies at various places).

5. 80 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ராணுவ பென்சனர்களையும்

கண்டறிந்து அவர்களுக்கு கடிதம் எழுதி கூடுதல் பென்சன் பெற

வகை செய்தது ஓர் மா பெரும் சாதனை ஆகும்.

6. முன்னாள் இராணுவத்தினர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி

பல நல்ல வேலைகளுக்கு பரிந்துரை செய்தது ஒரு சிறந்த பணி.

7. தொலை காட்சி நிகழ்சிகளை ஏற்பாடு செய்து நமது பிரச்சனைகளுக்கு

தீர்வு காண முனைவது பாராட்டுதற்குரியது.


இன்னும் பல நல்ல பணிகளை இந்த உதவி மையம் செய்து வருகிறது.


G.O.C அவர்களுக்கும், ஆர்வமுடன் பணிபுரியும் கேப்டன் டேவிட்

அவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment

CHRISTMAS GREETINGS

  Dear   Christian  Veterans and Families, We the Exwel Trust members,    "  WISH YOU ALL A VERY HAPPY MERRY CHRISTMAS "