Friday, February 1, 2013

HOW TO GET 2ND FAMILY PENSION IN TAMIL



இரண்டு குடுன்ப பென்சன் பெறுவது எப்படி ?

தகுதியுள்ள ஒவ்வொரு விதவைக்கும் பலவேறு கட்டங்களில் இந்த இரண்டாவது பென்சன் மறுக்கப்பட்டுள்ளது. அதை இப்போது பெறுவதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் விண்ணப்பங்களை தயார் செய்ய வேண்டும்.  குறிப்பாக 01.04.1985க்கு முன்னர் ராணுவத்திலிருந்து வெளி வந்து மறு பணியில் சேர்ந்தவர்களுக்கு ராணுவ குடும்ப பென்சன் பற்றி எந்த குறிப்பும் இருக்காது.

மறு பணியில் இருப்பவர்கள் குடும்ப பென்சனுக்கு பதிவு செய்ய விண்ணப்பங்களை ராணுவ ரெகார்ட் ஆபீசுக்கு அனுப்பப்படும்போது அவை பெரும்பாலும் நிராகரிக்க பட்டன. இந்த பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்போது இரண்டாவது பென்சனுக்கு விண்ணப்பத்தை அனுப்பும்போது  தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காரணம் குடும்ப பென்சனுக்கு இவர்கள் பெயரை பதிவு செய்வது மறுக்குபட்டிருக்கிறது.  எனவே இவர்கள் முதலில் குடும்ப பென்சனுக்கு தன் பெயரை முதலில் பதிவு செய்து அதன் பின்னர்தான் குடும்ப பென்சன் பெற முடியும். CDA  ஒரு பென்சன் ஆணை அனுப்ப ஆறு மாதம் வரை ஆகும்.

அடுத்து 01.04.1985 க்கு பின்னர் ராணுவ பணியிலிருந்து வெளி வந்தவர்களுடைய விதவைகள் பலதரப்பட்ட காரணங்களுக்காக குடும்ப பென்சன் பெறாமல் இருந்தால் இந்த அரசாணையின் மூலம் விரைவில் குடும்ப பென்சன் பெறலாம்.  அதாவது பாதிக்கபட்ட வர்களுடைய பெயர் ஏற்கனவே பதியபட்டிருந்து, சில காரணங்களுக்காக ராணுவ குடும்ப பென்சன் வாங்காமல் சிவில் குடும்ப பென்சன் வாங்கி கொண்டிருப்பவர்களுக்கு இந்த அரசாணையின் மூலம்  உடனே ராணுவ குடும்ப பென்சன் கிடைக்கும்.

சிலர் கையில் சிவில் குடும்ப பென்சன் ஆணை இருக்கும்.  ஆனால் பென்சன் வாங்காமல் இருப்பார்கள்.  இவர்கள் உடனே அந்த பென்சன் ஆணையின் நகலை சிவில் பென்சன் வழங்கும் அலுவலகத்துக்கு ஒரு விண்ணப்பத்துடன் அனுப்பவும்.  அதனுடன் இரண்டாவது பென்சன் வழங்கலாம் என்ற அரசு ஆணையையும் அனுப்பவேண்டும்.


விரைவில் இரண்டாவது குடும்ப பென்சன் பெற்று பேர குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ எங்கள் வாழ்த்துகள்.

இது சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவை எனில் எங்களை தொடர்பு கொள்ளவும்.

Thanks to Indian Exserviceman Blog.

No comments:

Post a Comment

PENSIONERS DAY

 Today  17-12-2024  is  PENSIONERS DAY. we, the Exwel trust members   on the occasion of  pensioners day, "WISH YOU ALL THE PENSIONERS ...