Saturday, July 14, 2012

GOOD NEWS FOR DEFENCE PERSONNEL




GOOD  NEWS  FOR  DEFENCE  PERSONNEL

Those who are eager to know about the outcome of our demand for One Rank One Pension and other issues may kindly click this link  GOOD NEWS. Positive Development

Thanks to Maj.Navdeep singh for publishing this information with background information.

முன்னாள் படை வீரகளுக்கும், முப்படை வீரர்களுக்கும் ஓர் நற்செய்தி.

பாதுகாப்பு படை வீரர்களின் குறைகளை களையும் பொருட்டு நமது பிரதம மந்திரியின் அலுவலகம் ஒரு கமிட்டியை அமைத்துள்ளது.

இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த கமிட்டியனது ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.  பின்னர் அரசால ஏற்றுக்கொள்ளப்பட்ட சிபாரிசுகளை வருகிற 15.08.2012 க்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது.

ராணுவ அமைச்சகத்தின் அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் இந்த கமிட்டி அமைக்கப்பட்டிருப்பது நமது படை தளபதிகளுக்கு ஒரு மாபெரும் வெற்றி.  ராணுவ அமைச்சகத்தின் அதிகாரிகள் நமது தளபதிகளை ராணுவ நிர்வாகத்தில் இருந்து எந்த அளவுக்கு ஒதுக்குகிறார்கள் என்பதை ஒரு சாதாரண படை வீரர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.

முதல் முறையாக நமது ராணுவ அமைச்சரும், நமது பிரதமரும் நமது படை வீரர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த கமிட்டியை அமைத்துள்ளனர் என்பதை அறியும் பொது மகிழ்ச்சி.  அதே நேரத்தில் இந்த கமிமிட்டியில் ஒரு உயர் ராணுவ அதிகாரியோ அல்லது ஒரு ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியோ சேர்க்கப்படவில்லை என்பது ஒரு பெரும் குறை.  எனினும் கமிட்டி விரும்பினால் ஒருவரை சேர்த்து கொள்ளலாம் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

இந்த கமிட்டியின் பரிசீலனையில் ஒன் ரேங்க் ஒன் பென்சன், குடும்ப பென்சன், இரண்டு குடும்ப பென்சன், படைவீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பலதரப்பட்ட ஊதிய மற்றும் பென்சன் முரண்பாடுகள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 15 இம் தேதி நமது பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றி நமக்கு நல்ல செய்தி சொல்வார் என்று நாம் அனைவரும் எதிர்பார்ப்போம்.

No comments:

Post a Comment