Thursday, March 22, 2012

நமது பெருமையை குறைக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது.

நமது பெருமையை குறைக்க யாரையும்
அனுமதிக்கக்கூடாது.

எனதருமை முன்னாள் முப்படை வீரர்களே!

நாம் இந்த நாட்டுக்கு செய்த தியாகம் / சேவைகள் இந்த நாகரீக உலகில் வெரும் கேலி கூத்தாகி வருகிறது.

முன்னாள் இராணுவத்தினர் நலன்  காக்க அமைக்கபட்டிருக்கும் அலுவலகங்களில் பணிபுரியும் சிவிலியன் ஊழியர்கள் சங்கம் சமீபத்தில் தமிழக அரசு செயலளருக்கு அனுப்பியுள்ள கடித த்தில் “உதவி இயக்குனர்களாக பதவியிலிருக்கும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் குடிகாரர்களாகவும், லஞ்சம் வாங்குபவர்களாகவும், பெண்களிடம் நன்னடத்தையில்லாதவர்களாகவும் இருப்பதகவும், இவர்களுக்கு இந்த முன்னாள் ராணுவ நலத்துறையில் எந்த பணியும் வழங்க கூடாது எனவும் சிவிலியங்களுக்கே அனைத்து பதவி உயர்வுகளும் வழங்க வேண்டும் எனவும் புகார் அனுப்பியுள்ளது.  இந்த புகார் கடிதம் அனைத்து உதவி இயக்குனர் அலுவலகத்திலும் உள்ளது.

முன்னாள் ராணுவத்தினர் நலன் காக்க அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் மீது இத்தனை  காழ்ப்புணர்ச்சியா ?  நினைத்து பார்க்கவே நெஞ்சு துடிக்கிறது.  நம் மீது இத்தனை வெறுப்பு கொண்ட இந்த ஊழியர்கள் நம் நலனுக்காக வேறு என்ன செய்வார்கள்  என்பது பெரும் கேள்விக்குறி.  இப்படி எண்ணம் கொண்டவர்களை நமது நலத்துறை நிர்வாக அலுவலகங்களில் பணியில் வைத்திருப்பதை அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும்.  இதுபோன்ற ஊழியர்களால் அந்த துறையின் செயல்பாடு கெட்டுவிடும்.  இதற்கு தக்க பதிலை நமது அறக்கட்டளை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

எனவே இதை படிக்கும் என் இனிய நண்பர்களே உடனே உங்கள் நல சங்கத்திடம் எடுத்துக்கூறி ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நட த்திட ஆவன செய்யவேண்டும் என இதன் மூலம் உங்கள்  அனைவரையும் அன்புடன் கேட்டுக்கோள்கிறேன்.  நன்றி.  செய்வீகளா ?
செய்வீர்கள் என்பதை எங்கள் தொலைபேசிக்கு தெரிவிக்கவும்.

தொலைபேசி: 9894152959, 9894125019, 9786449036

நம் இன உணர்வு வேண்டும் 
போர்முனை சென்றவர்கள் நீதிக்காக 
போராட தயங்கக்கூடாது. 
ஒன்று படுங்கள் 
தோழர்களே 
ஒன்று படுங்கள் 

No comments:

Post a Comment

PENSIONERS DAY

 Today  17-12-2024  is  PENSIONERS DAY. we, the Exwel trust members   on the occasion of  pensioners day, "WISH YOU ALL THE PENSIONERS ...