Friday, August 10, 2012

WILL THE PRIME MINISTER GIVE GOOD NEWS ?



Will the Prime Minister give us a good news ?

ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் கிடைக்குமா ?

பிரதமர் அமைத்த கமிட்டியிடம் நாம் எதிர்பார்ப்பது என்ன ?
நியாயமான எதிர்பார்ப்பு ஒன் ரேங்க் ஒன் பென்சன் மட்டும் தான்.  ஆனால் இதை அந்த கமிட்டி ஏற்காமல் மற்ற ஏதாவது முறையில் கொடுக்கலாம் என்று தெரிகிறது.

ஆறாவது ஊதிய கமிசன் அறிக்கை வெளி வந்த பின் முன்னாள் படை வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய அவசர அவசரமாக ஓரளவு முன்னேற்றமான பென்சன் ௦01.07.2009  முதல் வழங்கப்பட்டது.

இருந்தும் எல்லோருக்கும் சீராக ஒரே பென்சன் அமையாத காரணத்தால் இதை மறு பரிசீலனை செய்து 01.01.2006 இக்கு பின்னர் ஒய்வு பெற்றவர்களுக்கு கிடைக்கும் பென்சனுக்கு ஈடாக அதற்க்கு முன்னர் வந்தவர்களுக்கும் கிடைக்க வகை செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.  கண்டிப்பாக பென்சனில் ஒரு மாற்றம் இருக்கும்.  குறிப்பாக சிப்பாய், நாயக், ஹவில்டர்  இவர்களுக்கு ஒரு நல்ல காலம் பிறக்கும் என நம்பலாம்.

குடும்ப பென்சன்:  குடும்ப பென்சன் நிர்ணயிக்கப்பட்ட முறையில் மற்றம் செய்து நியாயமான குடும்ப பென்சன் வழங்க இந்த கமிட்டி சிபாரிசு செய்யும் என்று தெரிகிறது.  IESM  என்ற சங்கத்தின் அயராத முயற்சியால் இந்த பலன் கிடைக்க உள்ளது.

ஆபிசர்களுக்கு கூடுதல் பென்சன் : தற்போது ஆபிசர்களுக்கு பே பேண்டின் ஆரம்ப நிலையிலிருந்து நிர்ணயிக்கப்படும் பென்சன் இனி பே பேண்டில் அவருக்குரிய சம்பளத்தில் இருந்து நிர்ணயிக்கப்படும்.  (Taking the basis of minimum pay within the pay band)  இந்த முறையை அமுல்படுத்த ஏற்கனவே சண்டிகர் ராணுவ தீர்பாயமும், டெல்லி நீதி மன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளது.  இதன் பலன் உயர் பதவியிலுள்ள ஆபிசர்களுக்கு நல்ல பயனளிக்கும் என எதிபார்க்கபடுகிறது.  கமிட்டியின் சிபாரிசும் இதன் அடிப்படையில் அமையும் என எதிபர்க்கபடுகிறது.
இரண்டு குடும்ப பென்சன்: ராணுவ பணிக்குபின் மறுபனியில் சேர்ந்து ஒய்வு பெற்று இரண்டு பென்சன் வாங்கி வந்த ஒரு முன்னாள் படை வீரர் இறந்தபின் அவர் மனைவிக்கு இரண்டு கும்ப பென்சன் மறுக்கப்பட்டது.  சென்னை, கொச்சி போன்ற ராணுவ தீர்ப்பாயங்களில் இரண்டு குடும்ப பென்சன் வழங்கலாம் என பல நல்ல தீர்ப்புகள் வந்தும் அரசு மௌனமாக இருந்தது.  தற்போது இந்த கமிட்டி இந்த விதவைகளுக்கு இரண்டு குடும்ப பென்சன் வழங்கலாம் என சிபாரிசு செய்யும் என முழுமையாக நம்ப படுகிறது.

ஒரு தவறான அணுகுமுறையால் உடல் ஊனமுற்றவர்களுக்கு திருமணமானவுடன் பென்சன் நிறுத்தப்பட்டது.  இதை தகர்த்தெறிந்தது சண்டிகர் ராணுவ நீதி மன்றம்.  தற்போது இந்த கமிட்டியின் மூலம் அனைத்து உடல் ஊனமுற்ற பென்சனர்களுக்கும் திருமணம் ஆனபின்னரும் பென்சன் வழங்க சிபாரிசு செய்யபடுகிறது.

இன்னும், பணியிலிருக்கும் ஆபிசர்களின் சில முக்கியமான  பிரச்சனைகளான Non Functional Upgradation and Enhancement of Grade pay etc. இவைகளுக்கு தகுந்த தீர்வு இந்த கமிட்டி மூலம் காணப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலே குறிப்பிட்டவை நமது நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் கிடைக்கவேண்டிய குறைந்தபட்ச பயன்கள்.  கமிட்டியின் சிபாரிசு எப்படி இருக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.

நல்லதை நினைப்போம்.  நம்பிக்கையுடன் இருப்போம்.

ஆகஸ்ட் பதினைந்தை நோக்கி ஆவலுடன்


CREDIT: Indian Military.info

No comments:

Post a Comment

PENSIONERS DAY

 Today  17-12-2024  is  PENSIONERS DAY. we, the Exwel trust members   on the occasion of  pensioners day, "WISH YOU ALL THE PENSIONERS ...