Thursday, February 28, 2013

AWAITING PENSIONERS FOR THE LATEST REVISION






வங்கிகள் பென்சன் அரியர்ஸ் வழங்க 
ஏன் இந்த தாமதம் ?

அரசு ஆணைகள் 17.01.2013  அன்று வழங்கப்பட்டு, உடனடியாக புதிய பென்ஷனை 24.09.2012 முதல் கொடுக்க அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு விட்டன ஆனால் இதுநாள் வரை எந்த வங்கியும் கண்டுகொண்டதாக தெரிய வில்லை இந்த போக்கு நீடித்தால் வங்கிகள் கால தாமதத்திற்கு வட்டியுடன் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதை உணரவேண்டும்.

அரசு ஆணைகளை உடனே செயல்படுத்த முடியாத காரணங்களை ஆராய்ந்து அதற்க்கு விடை காண முயல வேண்டும் புதிய மேம்படுத்த பென்சன் பட்டியல்கள் அனைத்தும் மிகவும் தெளிவாக உள்ளன ஒரு ராணுவ பென்சனர் அல்லது ஒரு ராணுவ குடும்ப பென்சனருடைய கீழ் கண்ட முக்கிய விவரங்கள் வங்கியின் பென்சன் மென் பொருளில் தயாராக இருந்தால் எந்த சிரமும் இல்லாமல் பென்ஷனை மாற்றி விடலாம்.

ஒரு பென்சனருடைய ரேங்க்  (Rank of the Pensioner)
பணிக்காலம்  (Qualifying Service)
குரூப் (Group)

இந்த அடிப்படை தகவல்கள் ஒவ்வொரு வங்கியிலும் உள்ள C.P.P.C  ல் அந்தந்த பென்சனருடைய கோப்புகளில் இருக்கிறது ஆனால் இந்த வங்கிகள் பயன்படுத்தும் பென்சன் மென் பொருளில் இல்லை என்பது தான் பிரச்சனை இந்த கோப்புகளில் இருந்து எடுத்து பென்சன் மென்பொருளில் பதிவு செய்ய வங்கிகளுக்கு போதுமான ஊழியர்கள் இல்லை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல வழிகள் இருந்தும் வங்கிகள் எந்த முயற்ச்சியும் எடுத்ததாக தெரியவில்லை.

எனவே ஒவ்வொரு பென்சனரும் காலம் தாழ்த்தாமல் உடனே தாங்கள் பென்சன் பெரும் வங்கிக்கு சென்று மேலே  கண்ட மூன்று தகவல்களையும் கொடுத்து ஈமெயில் மூலம் தங்களுடைய C.P.P.C. க்கு அனுப்ப வலியுறுத்தவும்.

தாமதத்திற்கு தகுந்த ஆதாரத்துடன் நாம் வட்டி கேட்கும் போது எல்லாம் தானாக நடக்கும்அது தான் ஒரே வழி என்று தெரிகிறது.

காலம் தாழ்த்துவது நல்லதல்ல.
வங்கிகள்  இதை உணர வேண்டும்
Our sincere thanks to Indianexservicemanblog for this valuable article.

No comments:

Post a Comment