Tuesday, October 2, 2012

INVOLVEMENT OF SERVICE CHIEFS IN ESM WELFARE.

முன்னாள் படை வீரர்களின் நலன் காப்பதில் நம் படைத்தளபதிகளின் பங்கு என்ன? உண்மையாக சொன்னால், முன்னாள் படை வீரர்களின் நலன் காப்பது நமது படை தளபதிகளின் கடமை. ஆனால் நடைமுறையில் நம் படை தளபதிகளுக்கும் முன்னாள் படை வீரர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருப்பதுபோல் தெரியவில்லை. ஆனால் எழுத்துபூர்வமாக அனைத்து பணிகளும் இந்த முப்படை தளபதிகளுக்கே வழங்கபடுகிறது. உதாரணத்துக்கு ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை (Department of Ex-servicemen Welfare) எந்த ஒரு கடிதத்தையும் முப்படை தளபதிகளுக்கே அனுப்புகிறது. ஆனால் எந்த ஒரு கடிதத்தையும் இந்த தளபதிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சங்கத்துக்கு கூட அனுப்புவதில்லை. (IESL, AFA, NAVAL FOUNDATION) இந்த கடிதங்கள் பென்சன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் பல நாட்கள் கழித்து சி.டி.எ அலகாபாத் இணைய தளம் மூலம் கிடைக்கிறது. ராணுவ அமைச்சகத்தின் இணைய தளத்தில் எதுவும் வெளியிடபடுவதில்லை. அதே போல் அதன் கீழ் இயங்கும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறைக்கு ஒரு தனி இணையதளமே கிடையாது. அதே சமயத்தில் சிவிலியன் பணியாளர்கள் நலன் பேணும் ஓய்வூதிய நலத்துறை அருமையான இணைய தளத்தை பராமரித்து வருகிறது. (DEPARTMENT OF PENSION AND PENSIONERS WELFARE) பென்சனர்ஸ் போர்டல் (PENSIONERS PORTAL) என்று தொடங்கப்பட்ட இணைய தளம் ராணுவ பென்சனர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. முப்படைகளுக்கும் தனித்தனியாக சொந்தமான இணைய தளங்கள் இருந்தும், ஒய்வு பெற்ற படை வீரர் பென்சன் பற்றிய ஆணைகள் எதுவும் வெளியிடபடுவதில்லை. குறிப்பாக அதிகாமாக முன்னாள் படைவீரர்களைகொண்ட இந்தியா ராணுவ இணைய தளம் (Indian Army Web Site) தன் படை வீரர்களை கண்டுகொள்வதில்லை. முன்னாள் படை வீரர்களின் மறு வாழ்வுக்காக அமைக்கப்பட்ட ஒரு துறை (Director General of Resettlement) முன்னாள் படைவீரர்களை கொத்தடிமைகளாக, சௌகியதார் வேலைக்கு கண்ட கண்ட தனியார் நிறுவனங்களுக்கும், ஆரசின் பெரிய பெரிய அலுவலகங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையிலும், தின கூலி அடிப்படையி௮லும் மிக குறைந்த ஊதியத்தில் பணியமர்த்த துணை போகிறது. இந்த கொடுமைக்கு பல ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் துணை போகின்றனர். தட்டி கேட்பார் யாரும் இல்லை. ராணுவ தீர்ப்பாயங்கள் (Armed Forces Tribunal) அகில இந்திய அளவில் தொட ங்கி சுமார் மூன்று ஆண்டுகள் முடிவடையும் தருணத்தில், ஏறக்குறைய 2000 நல்ல தீர்ப்புகள் வழங்கியுள்ளன. எந்த ஒரு தீர்ப்பின் பயனையும் யாரும் பெற்றதாக தகவல் இல்லை. அத்தனை தீர்ப்புகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நம் தளபதிகள் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இந்த தீர்ப்புகளை ஏன் இன்னும் அமுல்படுத்த வில்லை என்ற காரணத்தையாவது நம் தளபதிகள் நமக்கு சொல்லவேண்டும். முன்னாள் படை வீரர்களின் நலன் காப்பதும் நமது கடமை என்பது நம் தளபதிகள் மறந்துவிடக்கூடாது. ஏதோ I.E.S.M. என்ற ஒரு நல்ல சங்கம் வந்தது முதல் ஓரளவு நம் முன்னாள் படை வீரர்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளது. நம் குறைகள் இணைய தளம் மூலம், தொலை காட்சி மூலம், செய்திதாள் மூலம் தெரிகிறது. நமது சங்கம் டெல்லியில் மட்டும் இல்லாமல், எல்லா மாநில தலை நகரங்களிலும் செயல்பட வேண்டும்..
 Sincer Thanks to C.Muthukrishnan, indianexserviceman blog. -

No comments:

Post a Comment

HAPPY NEWS - 8TH PCY COMMISSION

 IT IS A GOOD NEWS THAT  OUR  CENTRAL GOVERNMENT HAS  AGREED TO FORM  THE    8TH  CENTRAL PAY COMMISSION WHICH DUE FROM 01-01-2026.   THE ME...