Friday, November 21, 2014

VERY USEFUL ARTICLE IN TAMIL


Dear veteran brothers
 please go through this very useful Article in tamil regarding not knowing the correct rate of pension  and delayed payment by Banks,.

தாமதமாக வழங்கப்படும் பென்சன்


தாமதமாக வழங்கப்படும் பென்சன் நிலுவை தொகைக்கு
வங்கிகள் தானாக முன்வந்து 8% வட்டி வழங்க வேண்டும்.
தாமதமாக வழங்கப்படும் பென்சன் நிலுவை தொகைக்கு (Delayed payment of revised pension arrears) வங்கிகள் 01.10.2008  முதல் 8% வட்டி வழங்க வேண்டும் என்று மேற் கூறிய சுற்றறிக்கைகள் கூறுகின்றன.
ஆனால் நடைமுறையில் யாருக்கேனும் எந்த வங்கியும் கொடுத்தகாக தகவல் இல்லை.  காரணம் நம்மில் பலருக்கு இது பற்றி தெரியவில்லை.  அப்படி தெரிந்திருந்தாலும் வங்கிகளிடம் போராடி வாங்கும் திறமையும் கிடையாது.  நமது அறியாமையின் காரணமாக ஒரு இனம் கை ஏந்தும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை நினைக்கும்போது மனம் வேதனைபடுகிறது.
அனைத்து ராணுவ பென்சனர்களுக்கும் குடும்ப பென்சனர்களுக்கும் 24.09.2012 முதல் பென்சனை மாற்றி அமைக்க CDA  சுற்றறிக்கைகள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட போதிலும், இன்னும் பெரும்பாலான பென்சனர்களுக்கு பென்சன் மாற்றி அமைக்க படாமல் இருக்கிறது.  புதிய மாற்றி அமைக்க பட்ட  பென்சனானது ஒரு பென்சனரின் ரேங்க், சர்விஸ், மற்றும் அவருடைய குருப்பின் அடிப்படையிலேயே அமையும்.  இந்த மூன்று முக்கிய காரணிகளும் வங்கிகளிடம் இல்லாத பட்சத்தில் அவர்களால் உங்களுக்கு சரியான பென்சன் வழங்க முடியாது.
ஆகவே ஒவ்வொரு பென்சனரும் தன்னுடைய ரேங்க், சர்விஸ் மற்றும் குருப் இவற்றை குறித்து அதற்குரிய பென்சனை CDA  சர்குலர் படி குறித்து உரிய சான்றுடன் வங்கிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.  அல்லது மொபைல் போன் மூலம் முழு விபரங்களை எங்களுக்கு SMS அனுப்பி அதன் வழியாக சரியான பென்சன் பெற்று கொடுக்க ஒரு புதிய முயற்சியை விரைவில் எங்கள் எக்ஸ் வெல் அறக்கட்டளை  அறிமுகபடுத்த இருக்கிறது. 
சமீபத்தில் தற்செயலாக எங்களை சந்தித்த ஒரு குடும்ப பென்சனரின் பென்சனை சரிபார்க்கும் போது அவருக்கு மாத அடிப்படை பென்சன் ரூ.8154 கொடுப்பதற்கு பதிலாக வெறும் ரூ.3500 மட்டுமே கடந்த 26 மாதமாக வழங்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர் எங்கள் முயற்சியால் அவருக்கு ரூ.175000 நிலுவை தொகையும் ரூ.10000 நஷ்ட ஈடும் ஒரு புகழ் பெற்ற பெரிய வங்கியில் இருந்து பெற்று கொடுத்தோம்.  சமீப காலமாக இது போன்ற குறைபாடுகள் அதிக அளவில் எங்களிடம் வருகின்றன.
தனது 27 வயதில் 4 குழந்தைகளுடன், ராணுவ சேவையில் கணவனை இழந்த ஒரு விதவைக்கு 1967 முதல் விசேஷ குடும்ப பென்சன் வழங்கியது அரசு.  ஆனால் விசேஷ பென்சனுக்கும் சாதாரண பென்சனுக்கும் வித்தியாசம் தெரியாத வங்கி வெறும் சாதாரண பென்சனே கடந்த 18 வருடமாக வழங்கி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.11,34,000 அரியர் பெற்று கொடுத்தோம்.  தாமதமாக வழங்கப்பட்ட இந்த தொகைக்கு உரிய நஷ்ட ஈடாக ரூ.438000 கேட்டு வங்கிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.
பல நூற்று கணக்கான பென்சனர்களுக்கு கடந்த ஆறு வருடமாக சேவை செய்து சுமார் 5 கோடிக்கு மேல் பென்சன் அரியர் பெற்று கொடுத்திருக்கிறோம்.  அந்த சமயத்தில் வங்கிகளிடம் இந்த நஷ்ட ஈட்டை கேட்டு வாங்க சிந்திக்க வில்லை.  ரூ.5 கோடிக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு 8 சதவீத வட்டி நாங்கள் முனைப்போடு செயல் பட்டிருந்தால் ரூ.2 கோடி வரை அபராத  வட்டியாக பெற்று கொடுத்திருக்கலாம்.  நம் எல்லோருக்கும் மிகுந்த விழிப்புணர்வு அவசியம் என்பதை இப்போது தெரிந்து கொண்டோம்.
விரைவில் அறிமுகபடுத்த படும் எங்கள் திட்டத்தின் பெயர் “KNOW YOUR CORRECT PENSION THROUGH SMS”  “குறுஞ் செய்தி மூலம் சரியான பென்சன் அறியும் திட்டம் “.
         "தெரிந்து  கொண்டிருப்பது  ஒரு ஆயுதம்  வைத்திருபதற்கு  சமம் "
 
 
Sincere thanks to our veteran brother S.Muthu krishnan for this valuable article.

No comments:

Post a Comment

26TH CASE OF SWITCHING OVER TO FAMILY PENSION.

  Sucibai Chandramadi  W/o late  Sep. A.Isaac Jothimoney   and her Daughter in Law. at our Office         One  vertean  Sepoy A. ISAAC JOTHI...