Wednesday, January 13, 2010


ராணுவ
பென்சனர் குறை தீர்க்கும் கூட்டம்
ஆறாவது
ஊதிய கமிசனின் பரிந்துரைகள் அமுல் படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல பென்சனர்கள் சரியான பென்சன் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

எக்ஸ்வெல் அறக்கட்டளை தன்னால் முடிந்த அளவு நெல்லை மாவட்டத்திலுள்ள பல குக்கிராமங்களுக்கு சென்று, ராணுவ குடும்ப பென்சன் வாங்குபவர்களை சந்தித்து உதவிகளை செய்துள்ளது. இன்னும் அநேகம் பேர் எங்களை பற்றி தெரியாமல் இருக்கின்றனர்.

இதுவரை சுமார் இருநூறு பேர் பயன் பெற்றுள்ளனர். இன்னும் பலர் தெரியாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு சரியான பென்சன் கிடைக்க எல்லா உதவிகளையும் செய்ய எக்ஸ்வெல் அறக்கட்டளை தயாராக உள்ளது.
எமது அறக்கட்டளையின் சேவகர் திரு கந்தயா அவர்கள் இப் பூவுலஹில் காண கிடைக்காத ஒரு தங்கம். குடத்திலிட்ட விளக்காக இருக்கும் அவரின் பணிகள் நம் நண்பர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்க்காகத்தான் இந்த தமிழ் வடிவ வலைப்பூ தோன்றுகிறது.

எனவே
சம்பந்தப்பட்ட பென்சனர்கள் உடனே கீழ் கண்ட எக்ஸ்வெல் அறக்கட்டளை அலுவலகத்து வருகை தந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள். எமது முகவரி
எக்ஸ்வெல் அறக்கட்டளை"
எண்
பதினைந்து, மிலிடரி லைன்
சமாதானபுரம்
,
பாளையம்கோட்டை,
திருநெல்வேலி -இரண்டு.

தேவைபட்டால் ஒரு பென்சனர் குறை தீர்க்கும் கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் தேதி அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

HAPPY NEWS - 8TH PCY COMMISSION

 IT IS A GOOD NEWS THAT  OUR  CENTRAL GOVERNMENT HAS  AGREED TO FORM  THE    8TH  CENTRAL PAY COMMISSION WHICH DUE FROM 01-01-2026.   THE ME...